SL vs BAN, 2nd Test: கொழும்புவில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement

இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரரான அனாமுல் ஹக் ரன்கள் ஏதுமின்றியும், மொமினுல் ஹக் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்களிலும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் 8 ரன்களில் விக்கெட்டை இழந்தர். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீர்ரான ஷாத்மான் இஸ்லாமும் 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த முஷ்ஃபிக்கூர் ரஹிம் மற்றும் லிட்டன் தாஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியதுடன் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.  இதில் லிட்டன் தாஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 34 ரன்னிலும், முஷ்ஃபிக்கூர் ரஹீம் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மெஹிதி ஹசன் மிராஸ் 31 ரன்களிலும், நயீம் ஹசன் 25 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை தைஜூல் இஸ்லாம் 9 ரன்களுடனும், எபோதத் ஹொசைன் 5 ரன்னுடனும் தொடர்ந்தனர். இதில் எபோடட் ஹொசைன் 8 ரன்களுக்கும், தைஜுல் இஸ்லாம் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ மற்றும் சோனல் தினுஷா தலா 3 விக்கெட்டுகளையும், விஷ்வா ஃபெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் லஹிரு உதாரா சிறப்பான தொடக்கத்தை வழங்கி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதன்மூலம் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பதும் நிஷங்கா 42 ரன்களுடனும், லஹிரு உதாரா 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 164 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News