தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ரியான் ரிக்கெல்டன் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா ஆகியோர் சதமடித்து அசத்தியதுடன் 235 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தியது. 

Advertisement

இதில் டெம்பா பவுமா 106 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்களைக் குவித்தது. இதைனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ரியான் ரிக்கெல்டன் 176 ரன்களுடனும், டேவிட் பெட்டிங்ஹாம் 4 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் டேவிட் பெட்டிங்ஹாம் 5 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். மறுபக்கம் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் ரிக்கெல்டன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்தார்.

Advertisement

அவருடன் இணைந்து விளையாடிய கைல் வெர்ரைனும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கைல் வெர்ரைன் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 100 ரன்களை எடுத்த கையோடு ரிக்கெல்டன் ஆட்டமிழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் ரிக்கெல்டனும் 29 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 259 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய மார்கோ ஜான்சன் மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகியோரும் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் ஜான்சன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 62 ரன்களில் ஜான்சன் ஆட்டமிழக்க, 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்த நிலையில் கேசவ் மஹாராஜும் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 615 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அப்பாஸ், சல்மான் ஆகா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மிர் ஹம்ஸா மற்றும் குர்ரம் ஷஷாத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள பாகிஸ்தான் அணியில் கேப்டன் ஷான் மசூத் 2 ரன்னிலும், காம்ரன் குலாம் 12 ரன்னிலும், சௌத் சகீல் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 64 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இதில் பாபர் ஆசாம் 31 ரன்களுடனும், முகமது ரிஸ்வான் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News