தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ரியான் ரிக்கெல்டன் இரட்டை சதமும், கேப்டன் டெம்பா பவுமா, கைல் வெர்ரைன் சதமும் அடிக்க அந்த அணி முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது.

Advertisement

இதில் தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக ரியான் ரிக்கெல்டன் 259 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 106 ரன்களையும், கைல் வெர்ரைன் 100 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அப்பாஸ், சல்மான் ஆகா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மிர் ஹம்ஸா மற்றும் குர்ரம் ஷஷாத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் ஷான் மசூத் 2 ரன்னிலும், காம்ரன் குலாம் 12 ரன்னிலும், சௌத் சகீல் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர்.

Advertisement

இதனால் பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 64 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை பாபர் ஆசாம் 31 ரன்களுடனும், முகமது ரிஸ்வான் 9 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் பாபர் ஆசாம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் 58 ரன்களில் பாபார் ஆசாம் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ரிஸ்வானும் 46 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய சல்மான் அகா 19 ரன்களுக்கும், அமர் ஜமால் 15 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

இதனையடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் காகிசோ ரபாடா 3 விக்கெட்டுகளையும், குவேனா மபாகா மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் பாகிஸ்தான் அணி பாலோ ஆன் ஆனது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஷான் மசூத் மற்றும் பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களைத் தாண்டியது. அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 10 பவுண்டரிகளுடன் 81 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் குர்ராம் ஷஷாத் நைட் வாட்ச்மேனாக களமிறங்கி விக்கெட் இழப்பை தடுத்தார்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதன்மூலம் பாகிஸ்தான் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 213 ரன்களைக் குவித்துள்ளது. இதில் ஷான் மசூத் 102 ரன்களுடனும், குர்ராம் ஷஷாத் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மார்கோ ஜான்சென் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதனையடுத்து 208 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News