2nd Test, Day 3: ஆஸ்திரேலியா பந்துவீச்சில் தடுமாறும் வெஸ்ட் இண்டிஸ்!

Updated: Sat, Jan 27 2024 11:59 IST
2nd Test, Day 3: ஆஸ்திரேலியா பந்துவீச்சில் தடுமாறும் வெஸ்ட் இண்டிஸ்! (Image Source: Google)

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்களைச் சேர்த்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக ஜோசுவா டா சில்வா 79 ரன்களையும், கெவின் சின்க்ளெர் 71 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட், நாதன் லையன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து இன்னிங்ஸைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது 24 ரன்களுக்குகே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்பின் களமிறங்கிய அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், ஊஸ்மான் கவாஜா ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதன்மூலம் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்த்து. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமார் ரோச் 4 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இரண்டாம்வது இன்னிங்ஸைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 13 ரன் எடுத்திருந்தது. இதையடுத்து 35 ரன்கள் முன்னிலையுடன் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் கிரேய்க் பிராத்வைட் 16 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் இணைந்த அலிக் அதானாஸ் - கிர்க் மெக்கன்ஸி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிர்க் மெக்கன்ஸ் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதனைத்தொடர்ந்து அதானாஸுடன் இணைந்த கேவம் ஹாட்ஜ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதன்மூலம் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களைச் சேர்த்துள்ளது இதில் அதானாஸ் 28 ரன்களுடனும், கேவம் ஹாட்ஜ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட், கேமரூன் க்ரீன், நாதன் லையன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 128 ரன்கள் முன்னிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை