இந்தியா -  இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்களுக்கு ஆல அவுட்டானது. இந்திய அணி தரப்பில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெவ்ஸ்வால் 209 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

Advertisement

இப்போட்டியில் சதத்தை சிக்சருடன் பவுசெய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், இரட்டை சதத்தை பவுண்டரி அடித்து பதிவுசெய்து அசத்தினார். இவரைத் தவிற மற்ற எந்த ஒரு வீரரும் அரைசதம் கூட அடிக்காமல் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷீர், ரெஹான் அஹ்மத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். 

Advertisement

இந்நிலையிலி இப்போட்டியில் இரட்டை சதமடித்து அசத்தியதன் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சில சாதனைகளை படைத்துள்ளார். அதன்பின் குறைந்த வயதில் இரட்டை சதம் விளாசி மூன்றாவது இந்திய வீரர் எனும் சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ளி குறைந்த வயதில் இரட்டை சதமடித்த வீரர் எனும் சாதனையை தன்வசம் வைத்துள்ளார். 

இச்சாதனையை வினோத் காம்ப்ளி 21 வயது 31 நாள்களில் அடித்து முதல் இடத்தையும், முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் 21 வயது 277 நாள்களில் இரட்டை சதம் அடித்து இரண்டாம் இடத்திலும் உள்ளனர். அதில் தற்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் 22 வயது 77 நாள்களில் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவித் மியந்தத் 19 வயது 140 நாள்களில் இரட்டை சதம் விளாசி மிக இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் எனும் சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.

மேலும் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய நான்காவது வீரர் எனும் பெருமையை ஜெஸ்ய்வால் பெற்றுள்ளார். முன்னதாக இந்திய அணியின் வினோத் காம்ளி, முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, கௌதம் கம்பீர் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்துள்ளனர். அதிலும் 2008ஆம் ஆண்டிற்கு பின் இந்திய அணிக்காக இரட்டைச் சதம் அடித்த முதல் இடதுகை தொடக்க வீரர் எனும் பெருமையையும் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News