ஐபிஎல் 2025: ஹாரி புரூக்கிற்கு பதிலாக டெல்லி அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக நடந்து முடிந்த வீரர்கள் மெகா ஏலத்தில் ஹாரி புரூக்கை ரூ.6.25 கோடிக்கு டெல்லி அணி ஏலாத்தில் எடுத்திருந்தார். இந்நிலையில் ஹாரி புரூக் விலகியதை அடுத்து அவருக்கு பதில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
டேவிட் வார்னர்
இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் எங்கள். தற்போது 38 வயதான இந்த அனுபவம் வாய்ந்த வீரர் சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைபெற்று தற்போது பிரான்சைசிஸ் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். மேற்கொண்டு அவர் ஐபிஎல் தொடரில் இதுவரை 184 போட்டிகளில் விளையாடி 40.52 என்ற சராசரியில் 6565 ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலிலும் டேவிட் வார்னர் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். இதுதவித்து அவர் 399 டி20 போட்டிகளில் விளையாடி 13,492 ரன்களை குவித்து உலகில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலிலும் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இதனால்தான் ஹாரி புரூக்கிற்கு பதிலாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி டேவிட் வார்னரிஅ சேர்க்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் அவரின் அடிப்படை விலை ரூ.2 கோடி மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேன் வில்லியம்சன்
இந்த பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடிப்பவர் நியூசிலனதின் அனுபவ பேட்டர் கேன் வில்லியம்சன் தான். டேவிட் வார்னரைப் போலவே, கேன் வில்லியம்சனையும் மெகா ஏலத்தில் அவருடைய அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு எந்த அணியும் ஏலம் வாங்க முன்வரவில்லை. ஆனால் இப்போது ஹாரி புரூக்கிற்கு மாற்றாக வில்லியம்சன் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட அதிக வாய்ப்புள்ளது.
இதுவரை 79 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய கேன் வில்லியம்சன், அதில் அவர் சராசரியாக 35.47 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 125.62 இல் 2128 ரன்கள் எடுத்துள்ளார். இதுதவிர்த்து ஒட்டுமொத்தமாக டி20 புள்ளிவிவரங்களைப் பற்றி நாம் பேசினால், அவர் 262 போட்டிகளில் விளையாடி 6,675 ரன்கள் சேர்த்துள்ளார். மேலும் இதில் அவர் ஒரு சதம் மற்றும் 47 அரைசதங்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெவால்ட் ப்ரீவிஸ்
இந்த பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடிப்பவர் தென் ஆப்பிரிக்கா அணியின் ‘பேபி ஏபி’ என்றழைக்கப்படும், டெவால்ட் பிரீவிஸ் உள்ளார். முன்னதாக நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தின் போது டெவால்ட் பிரீவிஸை அவரது அடிப்படை தொகையான ரூ.75 லட்சத்திற்கு கூட எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. ஆனால் அதன்பின் அவர் சமீபத்தில் நடந்து முடிந்த எஸ்ஏ20 லீக் தொடரில் அதிரடியான ஆட்டத்தின் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
தற்போது 21 வயதே ஆன இளம் வீரர் தென் ஆப்பிரிக்கா அணியின் வருங்கால நட்சத்திரமாகக் கருதப்படுகிறார், இருப்பினும் அவருக்கு பெரிய தொடர்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதற்கு முன் கடந்த ஐபிஎல் சீசனில் அவர் மும்பை இந்தியன்ஸின் ஒரு பகுதியாக இருந்ததுடன், 10 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றார். ஆனால் அவரால் அதில் சோபிக்க முடியவில்லை. அதேசமயம் டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 81 போட்டிகளில் 1787 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.