மான்செஸ்டர் டெஸ்ட்: ஸாக் கிரௌலி இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
ENG vs IND, 4th Test: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஸாக் கிரௌலி இடம்பெறாத நிலையில் அவருக்கு பதில் எந்த மூன்று வீரர்கள் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரைக் கைப்பற்றும், இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிகாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன. மேற்கொண்டு இப்போட்டிக்கான இரு அணியின் பிளேயிங் லெவனும் என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் அதிகரித்து வருகின்றன.
இதில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக விளையாடி வரும் ஸாக் கிரௌலி தொடர்ந்து ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருவது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. மூன்று போட்டிகளின் விளையாடியுள்ள அவர் வெறும் 128 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் இப்போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் அவருக்கு பதில் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்களை இப்பதிவில் பார்ப்போம்.
ஜேக்கப் பெத்தேல்
இங்கிலாந்து அணியின் இளம் அதிரடி ஆல் ரவுண்டர் ஜேக்கப் பெத்தல். அவரால் தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் இங்கிலாந்துக்கு பங்களிக்க முடியும். இந்த ஆல்ரவுண்டர் தனது நாட்டிற்காக 3 டெஸ்ட் சர்வதேச போட்டிகளில் விளையாடி, அதில் 52 என்ற சராசரியில் 260 ரன்களையும், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதனால் ஸாக் கிரௌலிக்கு பதில் ஜேக்கப் பெத்தேல் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.
லியாம் டௌசன்
இந்த பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடிக்கும் வீரர் லியாம் டௌசன். இங்கிலாந்துக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள, அவர் 84 ரன்களையும், 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் லியாம் டௌசன் முதல்தர கிரிக்கெட்டில் 212 போட்டிகளில் 341 இன்னிங்ஸ்களில் விளையாடி 10,731 ரன்களையும் மற்றும் 371 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் லிடாம் டௌசனும் இந்த போட்டிக்கான லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.
ஜோஷ் டோங்
இந்த பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடிப்பவர் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங். இவர் இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்காக 2 போட்டிகளில் 4 இன்னிங்ஸ்களில் விளையடியதுடன் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் இவர் 5 டெஸ்ட் போட்டிகாளீல் விளையாஅடி 23 விக்கெட்டுகளையும், 58 முதல் தர போட்டிகளில் விளையாடி 207 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதனால் இவரும் லெவனில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது.
Also Read: LIVE Cricket Score
நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, லியாம் டௌசன், பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்.