இந்திய அணியில் அசத்திய சர்ஃப்ராஸ்; ஐபிஎல் தொடரில் இடம் கிடைக்குமா?

Updated: Tue, Feb 20 2024 17:16 IST
Image Source: Google

நடைபெற்றுவரும் இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியில் இளம் அதிரடி வீரர் சர்ஃப்ராஸ் கான் சர்வதேச டெஸ்ட் கிரிகெட்டில் அறிமுகமானார். இதையடுத்து தனது அறிமுக போட்டியில் ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃப்ராஸ் கான் இப்போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றுவருகிறார். 

அதேசமயம் கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லிக் கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த சர்ஃப்ராஸ் கான் மோசமான ஃபார்ம் காரணமாக வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து நடபாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் சர்ஃப்ராஸ் கானின் ஆரம்ப விலையான ரூ.20 லட்சத்திற்கு எந்த அணியும் அவரை வாங்க முன்வராததால், ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். 

இந்நிலையில் தற்போது அவர் இந்திய அணியில் இடம்பிடித்ததுடன், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளதால், நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் மாற்று வீரராக சர்ஃப்ராஸ் கான் தேர்வு செய்யபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இவர் மாற்று வீரராக தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவர் ரூ.50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை ஒப்பந்தம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதன்படி அவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ள அணிகள் குறித்து கிழே பார்ப்போம்..

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் தொடரின் போது எந்த வீரருக்கும் காயம் ஏற்பட்டால், சர்ஃப்ராஸை சிஎஸ்கே தனது முதல் வீரராக தேர்வுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் பெரும்பாலான போட்டிகள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் என்பதால், சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்ளும் சர்ஃப்ராஸ் கானுக்கு சிஎஸ்கே அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் ஒரு விக்கெட் கீப்பரும் கூட, எனவே போட்டியின் நடுவில் சிஎஸ்கேவுக்கு தேவைப்பட்டால், தோனிக்கு பதிலாக சர்ஃப்ராஸ் விக்கெட் கீப்பராக செயல்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் ராயல்ஸ்

சர்ஃப்ராஸ் கான் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ள அணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பெயரும் அடிபடுகிறது. ஏனெனில் கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. மேலும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ராஜஸ்தான் அணி தேவ்தத் படிக்கல்லை வெளியே அனுப்பியுள்ளதால், அவரது இடத்திற்கான மாற்று வீரராக சர்ஃப்ராஸ் கானை பார்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

டெல்லி கேப்பிட்டல்ஸ் சர்ஃப்ராஸ் கான் மீதும் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது டெல்லி அணியின் ஒரு அங்கமாக சர்ஃபாஸ் இருந்தார். ஆனால் கடந்த சீசனில் மோசமான செயல்பாட்டின் காரணமாக விடுவிக்கப்பட்டாலும், தற்போது அவர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் அவருக்கான வாய்ப்பை டெல்லி அணி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பந்த் மீண்டும் அணிக்கும் திரும்பினாலு, அவரால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியுமா என்பது கேள்வி குறியாக உள்ள நிலையில், சர்ஃப்ராஸின் தேர்வு டெல்லி அணிக்கும் பெரிதும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை