ஸ்டீவ் ஸ்மித்தின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியிடம் தோல்வியடைந்ததை அடுத்து, அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் திடீரென சர்வதேச ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சர்வதேச அரங்கில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருந்து வரும் ஸ்டீவ் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ஓய்வை அறிவித்துள்ள ஸ்டீவ் ஸ்மித்திற்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணியில் அவரது இடத்தை பிடிக்க கூடிய மூன்று வீரர்கள் குறித்தில் இப்பதிவில் பார்ப்போம்.
ஆரோன் ஹார்டி
இந்த பட்டியலில் 26 வயதான ஆல் ரவுண்டர் ஆரோன் ஹார்டி முதலிடத்தில் உள்ளார். இந்த இளம் ஆல்ரவுண்டர் இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 13 ஒருநாள் மற்றும் 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேற்கொண்டு நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலும் அவர் இடம்பிடித்திருந்த நிலையில், பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது ஸ்மித் ஓய்வு பெற்றதை அடுத்து அவரது இடத்தில் ஆரோன் ஹார்டி விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.
நாதன் மெக்ஸ்வீனி
இந்த பட்டியலில் மற்றொரு இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனிக்கும் இடமுள்ளது. முன்னதாக சமீபத்தில் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான மெக்ஸ்வீனி அத்தொடரில் ரன்களைச் சேர்க்க தவறியதன் காரணமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இருப்பினும் அவரது முதல்தர போட்டிகளை பார்த்தால் 38 போட்டிகளில் 75 இன்னிங்ஸ்களில் 2351 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம் லிஸ்ட் ஏ-யில் 25 ஆட்டங்களில் 24 இன்னிங்ஸ்களில் 888 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இதனால் இவருக்கும் ஸ்மித்தின் இடத்தை நிரப்பும் வாய்ப்பு உள்ளது.
சாம் கொன்ஸ்டாஸ்
Also Read: Funding To Save Test Cricket
இந்த பட்டியலில் அடுத்ததாக உள்ளவர் 9 வயதான சாம் கொன்ஸ்டாஸும் வரும் காலத்தில் ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கலாம். நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது சாம் கான்ஸ்டான்ஸுக்கும் சர்வதேச அளவில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் தனக்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, இளம் பேட்ஸ்மேன் ஆஸ்திரேலியாவின் வருங்கால நட்சத்திரமாகக் கருதப்படுகிறார். மேற்கொண்டு அவரின் முதல்தர கிரிக்கெட் கேரியரும் சிறப்பாக இருந்துள்ளதன் காரணமாக கூடிய விரையில் இவர் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியிலும் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.