Sam konstas
1st Test, Day 2: வெஸ்ட் இண்டீஸ் 190 ரன்னில் ஆல் அவுட்; மீண்டும் தடுமாறும் ஆஸ்திரேலியா!
WI vs AUS, 1st Test: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 190 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து வரும் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் தேதி முதல் பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 59 ரன்களையும், உஸ்மான் கவாஜா 47 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்பாடுத்திய ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஷமார் ஜோசப் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Related Cricket News on Sam konstas
-
1st Test, Day 1: கொன்ஸ்டாஸ், க்ரீன், இங்கிலிஸ் ஏமாற்றம்; முதல் இன்னிங்ஸில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 65 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
1st Test: வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இரு அணிகளின் பிளேயிங் லெவனும் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs AUS: லெவனில் இருந்து ஸ்மித், லபுஷாக்னே நீக்கம்; கொன்ஸ்டாஸ், இங்கிலிஸுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சாம் கொன்ஸ்டாஸ், ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் விளையாடுவார்கள் என ஆஸ்திரேலிய தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி உறுதியளித்துள்ளார். ...
-
விண்டீஸ் டெஸ்ட் தொடரில் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு தர வேண்டும் - மார்க் டெய்லர்!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் சாம் கொன்ஸ்டாஸுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் வலியுறுத்தியுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஆஸ்திரேலிய ஒப்பந்த பட்டியலில் கொன்ஸ்டாஸ், வெப்ஸ்டருக்கு இடம்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்த பட்டியலில் இளம் வீரர்கள் சாம் கொன்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டர், மேத்யூ குஹ்னமேனுக்கு இடம் கிடைத்துள்ளது. ...
-
ஸ்டீவ் ஸ்மித்தின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் ஓய்வை அறித்ததை தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியில் அவரது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஸ்காட் போலண்ட் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகிய சாம் கொன்ஸ்டாஸ் - வைரலாகும் காணொளி!
விக்டோரியா அணிக்கு எதிரான ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியில் சாம் கொன்ஸ்டாஸ் க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
AUS vs ENG: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சாம் கொன்ஸ்டாஸ்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் சாம் கொன்ஸ்டாஸ் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் - ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்ற ஹெட், சதர்லேண்ட்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை டிராவிஸ் ஹெட்டும், சிறந்த வீராங்கனைக்கான விருதை அனபெல் சதர்லேண்டும் கைப்பற்றியுள்ளனர். ...
-
SL vs AUS: சாம் கொன்ஸ்டாஸுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட்டை தொடக்க வீரராக களமிறக்கும் ஆஸி!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜாவுடன் டிராவிஸ் ஹெட் களமிறங்குவார்கள் என்று கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உறுதியளித்துள்ளார். ...
-
கொன்ஸ்டாஸை போல்டாக்கிய எட்வர்ட்ஸ் - காணொளி!
சிட்னி தண்டர் அணியின் நட்சத்திர வீரர் சாம் கொன்ஸ்டாஸை சிட்னி சிக்ஸர்ஸ் வீரர் ஜேக் எட்வர்ட்ஸ் க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
பிபிஎல் 2024-25: கொன்ஸ்டாஸ், கிரீன் அசத்தல்; ஸ்கார்ச்சர்ஸ் வீழ்த்தியது தண்டர்!
பிக் பேஷ் லீக் 2025: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47