இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய போப் லிட்ச்ஃபீல்ட் - ஜார்ஜியா வோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஜார்ஜியா வோல் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை 25 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய எல்லிஸ் பெர்ரியும் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இவர்களைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெத் மூனியும் 10 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் ஆஸ்திரேலிய மகளிர் அணி 78 ரன்னில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த அனபெல் சதர்லேண்ட் - ஆஷ்லே கார்ட்னர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்ந்தது. இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்ததுடன், 5ஆவது விக்கெட்டிற்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தின்ர். பின் 50 ரன்களை எடுத்த கையோடு ஆஷ்லே கார்ட்னர் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் சதலேண்டுடன் இணைந்த கேப்டன் தஹ்லியா மெக்ராத்தும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய அனபெல் சதர்லேண்ட் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 110 ரன்களில் சதர்லேண்ட் விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த தஹ்லியா மெக்ராத் 56 ரன்களையும் சேர்த்தார். இதனமூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா - ரிச்சா கோஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரிச்சா கோஷ் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் மந்தனாவும் இணைந்த ஹர்லீன் தியோலும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ஹர்லீன் தியோல் 39 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 12 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 9ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதன்பின் 14 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என ஸ்மிருதி மந்தனா 105 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, மின்னு மணி உள்ளிட்டோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இந்திய மகளிர் அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலாம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தியதுடன் 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் முழுமையாக கைப்பற்றியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News