Arundhati reddy
AUSW vs INDW, 3rd ODI: ஸ்மிருதி மந்தனா சதம் வீண்; இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய போப் லிட்ச்ஃபீல்ட் - ஜார்ஜியா வோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஜார்ஜியா வோல் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை 25 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய எல்லிஸ் பெர்ரியும் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Arundhati reddy
-
AUSW vs INDW, 3rd ODI: சதமடித்து அசத்திய சதர்லேண்ட்; இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 299 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இலங்கையை பந்தாடி இந்திய அணி அபார வெற்றி!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
விதிகளை மீறிய அருந்ததி ரெட்டி; அபராதம் விதித்த ஐசிசி!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி விதிகளை மீறியதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது இந்தியா!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தினார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24