நான் விளையாடிய சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று - ஷுப்மன் கில்!

Updated: Sat, Nov 02 2024 21:27 IST
Image Source: Google

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் சேர்த்தனர்.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ஷுப்மன் கில் 90 ரன்களையும், ரிஷப் பந்த் 60 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வாஷிங்டன் சுந்தர் 38 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். 

இதனால் இந்திய அணி 263 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து அணி சார்பில் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் முதல் இன்னிங்சில் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூசிலாந்து அணியில் வில் யாங் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதன் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதில் அஜாஸ் படேல் 7 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இதனையடுத்து 143 ரன்கள் முன்னிலையுடன் நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தாஇ தொடரவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்தியது குறித்து பேசிய ஷுப்மன் கில், “ஆம், டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் விளையாடிய சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று. இந்த டெஸ்டுக்கு முன், நாங்கள் விளையாடிய இங்கிலாந்து தொடரில் பணியாற்ற தவறிய பகுதிகளில் நான் பணியாற்றியுள்ளேன். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நான் சிறந்த முறையில் பேட்டிங் செய்தேன் என்று நினைக்கிறேன். எனது பயிற்சியில் எவ்வாறு செயல்பட்டேனோ அதனையே இந்த போட்டிக்கு முன் பிரதிபலிக்க முயற்சித்தேன்.

இவ்வளவு ரன்களை எடுக்க வேண்டும் என்று நினைத்து நான் என் மீது அதிக அழுத்தம் கொடுக்க முயற்சிக்கவில்லை. கஷ்டமாக இருந்தாலும் நடுவில் ஜாலியாக அந்த தருணத்தை அனுபவிக்க முயன்று கொண்டிருந்தேன். ஏனென்றால் இவ்வளவு டெஸ்ட் போட்டிகளில் உங்களால் தொடர்ச்சியாக விளையாட முடியாது. நான் அங்கு பேட்டிங் செய்யும்போது, ​​என் மீது அதிக அழுத்தம் கொடுத்தால், பேட்டிங் கலையின் வேடிக்கையை இழந்துவிடுகிறேன் என்று உணர்கிறேன்.

Also Read: Funding To Save Test Cricket

பிப்ரவரியில் தொடங்கிய இங்கிலாந்து தொடருக்கு முன்பு சுழலுக்கு எதிரான எனது ஆட்டத்தில் நான் பணியாற்றினேன். ஆனால் முதல் டெஸ்டில் காயம் காரணமாக எனக்கு அவ்வளவு நேரம் கிடைக்கவில்லை. இந்த டெஸ்ட் போட்டிகள் வரை கூட, காயம் காரணமாக நான் அவ்வளவாக பயிற்சி செய்யவில்லை. அதனால், புனே டெஸ்டுக்கு முன்பு எனக்கு நெட்ஸில் அதிக நேரம் கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை