நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் நியூசிலாந்து அணியானது 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியதுடன் இந்திய மண்ணில்முதல் முறையாக டெஸ்ட் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

Advertisement

இந்நிலையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மும்பையில் உள்ள புகழ்பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் கடந்த நவம்பர் 01ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அத்னபடி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் சேர்த்தனர்.

Advertisement

இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ஷுப்மன் கில் 90 ரன்களையும், ரிஷப் பந்த் 60 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வாஷிங்டன் சுந்தர் 38 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர்.  இதனால் இந்திய அணி 263 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து அணி சார்பில் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சில் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூசிலாந்து அணியில் வில் யாங் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.  இதன் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை அஜாஸ் படேல் 7 ரன்களுடனும், வில்லியம் ஓ ரூர்க் ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர்.

இதில் அஜாஸ் படேல் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜாவின் பந்துவீச்சில் அகாஷ் தீப்பிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.  இதனால் நியூசிலாந்து அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 174 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணிக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்ம - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா இந்த இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோரும் அடுத்தடுத்து அஜாஸ் படேல் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின்னர் அணியின் மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 ரன்னிலும், சர்ஃப்ராஸ் கான் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, இந்திய அணியும் 29 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த ரிஷப் பந்த் - ஜடேஜா இணை நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தனர்.

Advertisement

இதில் ரிஷப் பந்த் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி வந்த நிலையில், மறுபக்கம் ரவீந்திர ஜடேஜா 6 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த ரிஷப் பந்த் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 64 ரன்களைச் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் களமிறங்கிய அஸ்வின் 8 ரன்னிலும், ஆகாஷ் தீப் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழக்கம், மறுபக்கம் அணியின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்பட்டு வந்த வாஷிங்டன் சுந்தரும் 12 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 121 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அஜாஸ் படேல் 6 விக்கெட்டுகளையும், கிளென் பிலீப்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் புதிய வரலாறு படைத்துள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News