டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கோப்பையை வென்ற 4 இந்திய வீரர்கள்!

Updated: Tue, Jul 02 2024 22:07 IST
டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கோப்பையை வென்ற 4 இந்திய வீரர்கள்! (Image Source: Google)

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இதன்மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து இந்திய அணிக்கும் அணி வீரர்களுக்கும் பல்வேறு தப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 

இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக தேர்வுசெய்யப்பட்ட நிலையிலும் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்ட வீரர்கள் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தும் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கோப்பையை வென்ற வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

பியூஷ் சாவ்லோ (Piyush Chawla)

இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்த வீரர் இந்திய அணியின் முன்னாள் வீரரான பியூஷ் சாவ்லா தான். கடந்த 2007ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த பியூஷ் சாவ்லா, அத்தொடரில் ஒருபோட்டியில் கூட விளையாடவில்லை. மேலும் அத்தொடரில் இந்திய அணி கோப்பையை வென்ற நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் கோப்பையை வென்ற முதல் வீரர் எனும் சாதனையை படைத்தார். 

சஞ்சு சாம்சன் (Sanju Samson)

இந்திய அணியின் வலது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், சமீப காலமாக சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக சாம்சன் முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். இதனால் நிச்சயம் அவர் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், இத்தொடரில் ஒரு போட்டியில் கூட அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் நடப்பு உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வென்றதன் மூலம் அவருடைய பெரும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal)

இந்திய அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுகமானதில் இருந்து, தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2024 டி20 உலகக் கோப்பையில் முதன்முறையாக ஐசிசியின் முக்கிய நிகழ்வுக்கான இந்திய அணியிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் இன்னிங்ஸைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட் நிலையில், அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யுஸ்வேந்திர சஹால் (Yuzvendra Chahal)

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்த பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலும் இடம் பிடித்துள்ளார். யுஸ்வேந்திர சாஹல் 2019 உலகக் கோப்பை மற்றும் 2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்தார். ஆனால் அத்தொடர்களில் இந்திய அணியானது அரையிறுதிச்சுற்று வரை முன்னேறிய நிலையில், அதில் தோல்வியைத் தழுவி இருந்தது. இதனையடுத்து நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் சஹால் மீண்டும் இடம்பிடித்திருந்தார். இத்தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றாலும், இத்தொடருக்கான அணியில் இடம்பிடித்திருந்த யுஸ்வேந்திர சஹால் ஒரு போட்டியில் கூட வாய்ப்பை பெறாமல் பெஞ்சில் அமரவைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை