மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நன்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில்  இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தினார். அதேசமயம் சாம் கொன்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜா மற்றும் மார்னஸ் லபுஷாக்னே ஆகியோர் அரைசதங்களையும் கடந்து அசத்தினர். 

Advertisement

இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 13 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 140 ரன்களையும், மார்னஸ் லபுஷாக்னே 72 ரன்களையும் அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸ் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 60 ரன்களையும் சேர்த்தனர்.  இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர்.

Advertisement

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா இப்போட்டியிலும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேஎல் ராகுலும் 24 ரனகளில் ஆட்டமிழந்தார். அதன்பின் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஜெய்ஸ்வால் தனது அரைசதத்தை அடித்தார். பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 82 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் 36 ரன்கலில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆகாஷ் தீப்பும் ரன்கள் ஏதுமின்றி பெவிலியன் திரும்பினார்.

இதனால் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை  ரிஷப் பந்த் 6 ரன்களுடனும், ஜடேஜா 4 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அணியை சரிவிலிருந்து மீட்டெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 28 ரன்களைச் சேர்த்த நிலையில் தேவையில்லாத ஷாட்டை விளையாடி விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜாவும் 17 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிதீஷ் ரெட்டி 40 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களையும் எடுத்து களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் இந்திய அணி இப்போட்டியில் ஃபாலோ ஆனை தவிர்க்க மேலும் 54 ரன்களை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News