AUS vs IND, 5th Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலிய அணி!

Updated: Sat, Jan 04 2025 07:18 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த  இந்திய அணியில் ரிஷப் பந்த் 40 ரன்களையும், , ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலனட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கொன்ஸ்டாஸ் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கினார். அதேசமயம் உஸ்மான் கவாஜா 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்நிலையில் 176 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இதில் சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் மார்னஸ் லபுஷாக்னே இணை இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் லபுஷாக்னே 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடி வந்த சாம் கொன்ஸ்டாஸும் 23 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய டிராவிஸ் ஹெட்டும் 4 ரன்களில் நடையைக் கட்டினார். 

இதனால் ஆஸ்திரேலிய அணி 39 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்டீவ் ஸ்மித் பெரிய ஸ்கோரை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 33 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இதன் காரணமாக இரண்டாம் நாள் உண்வு இடைவேளைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இதில் பியூ வெப்ஸ்டர் 28 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 4 ரன்களிலும் என களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 84 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸைத் தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை