நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்பாடி இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வென்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் சௌமியா சர்கார் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினாலும், மறுபக்கம் களமிறங்கிய அனமுல் 2 ரன்களிலும், நஜ்முல் ஹொசைன் 6 ரன்களிலும், லிட்டன் தாஸ் 6 ரன்களிலும், ஹிரிடோய் 12 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Advertisement

அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌமியா சர்கார் சதமடித்து அசத்தியதுடன் 22 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசி 169 ரன்களில் ஆட்டமிழக்க, அவருக்கு துணையாக விளையாடிய முஷ்பிக்கூர் ரஹிம் 45 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, வங்கதேச அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 291 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் - ரச்சின் ரவீந்திரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு அடித்தளம் அமைத்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 45 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பாக விளையாடிய வில் யங் அரைசதம் கடந்தார். 

அவருடன் இணைந்த ஹென்றி நிக்கோலஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் சதமடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 89 ரன்களில் வில் யங்கும், 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 95 ரன்களைச் சேர்த்த ஹென்றி நிக்கோலஸும் விக்கெட்டை இழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய கேப்டன் டாம் லேதம் 34 ரன்களையும், டாம் பிளண்டல் 24 ரன்களையும் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 46.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News