ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் இரண்டு 2023-27 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கனடா அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஜான்சன் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்து 7 ரன்களில் ஆதித்யா வரதராஜன் 7 ரன்களுக்கும், மற்றொரு தொடக்க வீரர் தில்ப்ரீத் பஜ்வா 25 ரன்களிலும், கேப்டன் நிக்கோலஸ் கிர்டன் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். 

Advertisement

அதன்பின் இணைந்த ஹர்ஷ் தகர் - ஸ்ரேயாஸ் மொவ்வா ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் மொவ்வா தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹர்ஷ் தகர் 35 ரன்களில் விக்கெட்டை இழக்க, அரைசதம் கடந்திருந்த ஸ்ரேயாஸ் மொவ்வா 65 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் சோபிக்க தவற, கனடா அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Advertisement

நெதர்லாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கைல் கெலின் 4 விக்கெட்டுகளையும், பால் வான் மீகெரன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணிக்கு மைக்கேல் லெவிட் - மேக்ஸ் ஓடவுட் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதத்தை நெருங்கிய மைக்கேல் லெவிட் 45 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய விக்ரம்ஜித் சிங்கும் 29 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ் ஓடவுட் அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் அடுதடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேக்ஸ் ஓடவுட் 8 பவுண்டரிகளுடன் 79 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் நேதர்லாந்து அணி 45.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் கனடா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News