வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டெஸ்ட்டில் விளையாட ஆர்வம் காட்டுவதில்லை - ஆண்ட்ரே ரஸல்!

Updated: Tue, Aug 13 2024 20:56 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் முடிவு எட்டபடாததால் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை மறுநாள் கயானாவில் உள்ள புராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் ஒரு காலத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அசைக்கமுடியாத ஜாம்பவானாக திகழ்ந்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த சில ஆண்டுகளாகவே டி20 கிரிக்கெட்டைத் தவிர்த்து மற்ற ஃபார்மெட்களில் சிறப்பாக செயல்பட தடுமாறி வருகிறது. அதில் குறிப்பாக அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிதளவில் சோபிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. 

இதற்கு காரணம் அணியின் நட்சத்திர வீரர்கள் பலரும் வெஸ்ட் இண்டீஸின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்காக விளையாடாமல் உலகளில் நடைபெற்றுவரும் ஃபிரான்சைஸ் டி20 லீக் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருவது தான். இந்நிலையில், வெஸ்ட் இண்டிஸை சேர்ந்த பல வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் கட்டுவதில்லை என அந்த அணி வீரர் ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடாமல் தவிர்பதற்கு பணம் ஒரு காரணமாக இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டிகளில் நிறைய வீரர்கள் விளையாடிவருவதன் காரணமாக வீரர்கள் டெஸ்டில் விளையாடுவதில் ஆர்வம் காட்டவில்லை என்று நினைக்கிறேன். மற்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை பார்க்கும் போது நான் எப்போதும் உற்சாகமடைகிறேன். 

அதிலும், அவர்கள் வெளிநாடுகளில் சிறப்பாக செயல்படும் வரை, அவர்கள் அந்த வாய்ப்பைப் பெறுவார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் எல்லோரும் பெரிய மேடையில் விளையாட விரும்புகிறார்கள். எனவே, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதுபோன்ற பெரிய நிலை வந்தால், இளைஞர்கள் நிச்சயம் மகிழ்ச்சியுடன் விளையாடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் பணம் அல்லது அது போன்ற எதையும் வைத்து வீரர்கள் சிந்திப்பதில்லை” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

வெஸ்ட் இண்டீஸ் அணிகாக 2010ஆம் ஆண்டு அறிமுகமான ஆண்ட்ரே ரஸல் இதுவரை ஒரு டெஸ்ட், 56 ஒருநாள் மற்றும் 82 டி20 போட்டிகளில் விளையாடி இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ரன்களையும், 131 விக்கெட்டுகளையும் கைப்பற்றிள்ளார். அதிலும் குறிப்பாக அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக முதலில் அறிமுகமானது டெஸ்ட் கிரிக்கெட்டில் தான். ஆனால் அதுவே அவரது கடைசி டெஸ்ட் போட்டியாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை