சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயன லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் உத்தரகாண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் உத்தரகாண்ட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு பாபா இந்திரஜித் மற்றும் துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், இந்திரஜித் 37 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த துஷார் ரஹேஜா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், 55 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அதன்பின் களமிறங்கிய ஜெகதீசன் அதிரடியாக விளையாடிய நிலையில் அவரும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய பிரதோஷ் ரஞ்சன் பால் 18 ரன்களிலும், ஷாருக் கான் 15 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, 57 ரன்களை எடுத்திருந்த ஜெகதீசனும் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்தாலும் 194 ரன்களைக் குவித்தது. உத்தரகாண்ட் அணி தரப்பில் பியூஷ் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய உத்தரகாண்ட் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.

அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் அவ்னீஷ் சுதா 7 ரன்னிலும், ரவிக்குமர் சமர்த் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த குனால் சண்டிலா - ஆதித்யா டாரே இணை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் குனால் சண்டிலா 18 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து விஜய் சர்மா 3 ரன்னிலும், ஸ்வப்நில் சிங் 13 ரன்னிலும், பிரசாந்த் பாட்டி 6 ரன்னிலும் என விக்கெட்டை இழந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆதித்யா டாரே 3 சிக்ஸர்களுடன் 31 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். 

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களாலும் தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் உத்தரகாண்ட் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சந்தீப் வாரியர் 4 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, ஷாருக் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் தமிழ்நாடு அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரகாண்ட் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News