ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்ததுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது. நவி மும்பையிலுள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அலிசா ஹீலி - பெத் மூனி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

Advertisement

பின் 8 ரன்கள் எடுத்திருந்த அலிசா ஹீலி ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தஹிலா மெக்ராத் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதன்பின் 17 ரன்களில் பெத் மூனியும், ரன்கள் ஏதுமின்றி ஆஷ்லே கார்ட்னரும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த எல்லிஸ் பெர்ரி - லிட்ச்ஃபீல்ட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லிட்ச்ஃபீல்ட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 49 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து வந்த கிரேஸ் ஹாரிஸும் ஒரு ரன்னுக்கு விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அனபெல் சதர்லேண்ட் அதிரடியாக விளையாட முயற்சித்து 12 ரன்களுடன் நடையைக் கட்டினார். 

இவர்களைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எல்லிஸ் பெர்ரி 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 37 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் 19.2 ஓவர்களில் ஆஸ்திரேலிய மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் டிடாஸ் சாது 4 விக்கெட்டுகளையும், ஷ்ரெயங்கா பாட்டி, தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித் தள்ளிய இருவரும் அரைசதம் கடந்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 137 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

Advertisement

அதன்பின் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்மிருதி மந்தனா விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷஃபாலி வர்மா 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 64 ரன்களைச் சேத்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News