ஐபிஎல் 2025: குஜராத் ஜெயண்ட்ஸின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இந்த வார இறுதியில் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதிலும் குறிப்பாக தங்களுடைய முதல் சீசனிலேயே கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி இம்முறை ஷுப்மன் கில் தலைமையில் சாதிக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி மார்ச் 25ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து பலபப்ரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பதை அகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் பேசுகையில், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில் மற்றும் ஜோஸ் பட்லரைத் தேர்வு செய்துள்ள அவர், மூன்றாம் வரிசையில் சாய் சுதர்ஷனை தேர்ந்தெடுத்துள்ளார். அவரைத் தொடர்ந்து நான்காம் இடத்திற்கு மஹிபால் லாம்ரோரையும், 5ஆம் இடத்தில் நியூசிலாந்து ஆல் ரவுண்டர் கிளென் பிலீப்ஸுக்கு ஆகாஷ் சோப்ரா வாய்ப்பு வழங்கியுள்ளார்.
இதுதவிர்த்து தமிழாக ஆல் ரவுண்டர்கள் ஷாரூக் கான் அல்லது வாஷிங்டன் சுந்தருக்கு லெவனில் இடம் கொடுத்துள்ள ஆகாஷ் சோப்ரா, அணியின் ஃபினிஷராக ராகுல் திவேத்தியாவை தேர்ந்தடுத்துள்ளார். மேற்கொண்டு அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானையும், வேகப்பந்து வீச்சாளர்களாக காகிசோ ரபாடா, முகமது சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோருக்கும் ஆகாஷ் சோப்ரா வாய்ப்பு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கொண்டு இதில் மாற்றங்களை செய்ய விரும்பும் பட்சத்தில் கிளென் பிலீப்ஸுற்கு பதிலாக ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டையும், வாசிங்டன் சுந்தருக்கு பதிலாக ஷாருக்கானை, வேகப்பந்து வீச்சாளர்களில் இஷாந்த் சர்மாவையும் லெவனில் சேர்க்க முடியும் என்பதை கூறியுள்ளார். இதில் ஷாரூக் கான் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோரை இம்பேக்ட் வீரர் விதியைப் பயன்படுத்தி வாய்ப்பு வழங்கலாம் என்பதையும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்: ஷுப்மான் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாய் சுதர்ஷன், மஹிபால் லோம்ரோர், கிளென் பிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், ககிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ். இம்பேக்ட் பிளேயர் - ஷாருக் கான், இஷாந்த் சர்மா.
Also Read: Funding To Save Test Cricket
குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மன் கில் (கேப்ட்ன்), ஜோஸ் பட்லர், சாய் சுதர்ஷன், ஷாருக் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ராகுல் திவேத்தியா, ரஷித் கான், நிஷாந்த் சிந்து, மஹிபால் லோம்ரோர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், மானவ் சுதர், வாஷிங்டன் சுந்தர், ஜெரால்ட் கோட்ஸி, முகமது அர்ஷத் கான், குர்னூர் சிங் ப்ரார், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், சாய் கிஷோர், இஷாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ், கிளென் பிலிப்ஸ், கரீம் ஜனத், குல்வந்த்யா கே.