பாபர் ஆசாமிற்கு வாழ்த்து கூறிய ஏபிடி வில்லியர்ஸ்; வைரலாகும் எக்ஸ் பதிவு!

Updated: Wed, Oct 02 2024 21:31 IST
Image Source: Google

வங்கதேச அணி சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடர் முடிவில் வங்கதேச அணியானது இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியதுடன், தொடரை முழுமையாக கைப்பற்றியும் சாதனைக படைத்தது.. 

அதேசமயம் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனேனில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் ஒரு அவமானகரமான தோல்வியை 2-0 என்ற கணக்கில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதன் காரணமாக அந்த அணியின் கேப்டன், தேர்வுகு குழு, நட்சத்திர வீரர்கள் என அனைவர் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இத்தோல்வியின் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமானது சில மாற்றங்களை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அந்த வகையில் அணியின் கேப்டன்களை மாற்றும் முயற்சியில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இறங்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பதிவியில் இருந்து விலகுவதாக நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் இன்று அறிவித்துள்ளார். முன்னதாக, கடந்தாண்டு நடந்து முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியானது லீக் சுற்றுடனே வெளியேறி ஏமாற்றமளித்தது. இத்தோல்விக்கு பொறுபேற்கும் வகையில் அணியை கேப்டனாக வழிநடத்திய பாபர் ஆசாம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலுகுவதாக அறிவித்தார்.

இதையடுத்து டெஸ்ட் அணிக்கு ஷான் மசூத்தும், டி20 அணிக்கு ஷாஹீன் அஃப்ரிடியும் தேர்வுசெய்யப்பட்டனர். ஆனால் இவர்களது தலைமையிலும் பாகிஸ்தான் அணியானது அடுத்தடுத்த தோல்விகளையே சந்தித்து வந்தது. இதனால் இந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாபர் ஆசாம் மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றார். ஆனால் நடந்து முடிந்த இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்த பாகிஸ்தான் அணியானது லீக் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றமளித்தது. இதனால் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

 

இருப்பினும் அவர் தனது கேப்டன் பதவி குறித்து எந்தவொரு அறிவிப்பையை வெளியிடாத காரணத்தால் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் அவர் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவர் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சமூக வலைதள பதவின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையிலும், சிலர் பாபர் ஆசாமின் முடிவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

இதுகுறித்து பாபர் ஆசாமின் எக்ஸ் பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் ஏபிடி வில்லியர்ஸ் தனது எக்ஸ் பதிவில், “வாழ்த்துக்கள். நீங்கள் சிறப்பாக இருந்தீர்கள். இப்போது உங்கள் அணிக்காக இன்னும் நிறைய ரன்களை சேருங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ஏபிடி வில்லியர்ஸின் இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து பாகிஸ்தான் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்க, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அணிகளுடன் விளைடாவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை