ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

Advertisement

இதனைத்தொடர்ந்து இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ், எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

Advertisement

அதன்படி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று ஏபி டி வில்லியர்ஸ் கணித்துள்ளார். முன்னதாக தனது நான்காவது அணியை கணித்த ஏபிடி வில்லியர்ஸ், அந்த இடத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை வகைப்படுத்தினார். 

ஆனால் அதன்பின் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு யூனிட்டானது சிறப்பாக உள்ளதாகவும், அதனால் அவர்கள் ஒரு ஆபத்தான அணி என்பதாலும் அந்த அணியால் அரையிறுதிக்கு முன்னேறும் என்று தனது கணிப்பை தெரிவித்துள்ளார். அதனைத் தாண்டி இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் நிச்சயம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று ஏபி டி வில்லியர்ஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News