WTC 2023: எந்த அணி கோப்பை வெல்லும் என்று டி வில்லியர்ஸ் கணிப்பு!

Updated: Tue, Jun 06 2023 23:00 IST
Image Source: Google

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

அதேவேளையில் இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பது குறித்த கணிப்புகளை முன்னாள் வீரர்கள் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபிடி வில்லியர்ஸ் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

அந்தவகையில் இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி குறித்து பேசிய ஏ.பி.டிவில்லியர்ஸ் கூறுகையில், “ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. 

 

எனவே நிச்சயம் அவர்கள் ஆஸ்திரேலிய அணியை இந்த போட்டியில் வீழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது. அதோடு இந்த மைதானம் பேட்டிங் செய்ய நல்ல மைதானம். நிச்சயம் இந்த போட்டியின் கடைசி இரு நாட்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் புகுந்து விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார் 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை