ரிஷப் பந்திற்கு உளவியல் ரீதியிலான சிகிச்சை தேவை - அபினவ் பிந்த்ரா!

Updated: Thu, Jan 05 2023 17:24 IST
Image Source: Google

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த், வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டார். இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக ஒருநாள், டி20 தொடரில் ரிஷப் பந்த் சேர்க்கப்படவில்லை. இவர் டெஸ்டில் விளையாடுவதைப் போல ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவது கிடையாது. இதனால்தான், இலங்கை தொடருக்கான இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இலங்கை தொடரில் நீக்கப்பட்டதால், ஓய்வுக்காக ரிஷப் பந்த் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அதிகாலை நேரத்தில் அவர் சாலை விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் மருத்துவமனையில் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் விரைந்து குணமடைய வேண்டும் என பலர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று வரை டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சூழலில் தனது கருத்தை அபினவ் பிந்த்ரா பகிர்ந்துள்ளார். “ரிஷப் பந்த குணமடைய பிசிசிஐ அற்புதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவருக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சையின் ஒரு பகுதியாக உளவியல் ரீதியான உறுதுணையும் வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை