டி10 லீக்: டேனி பிரிக்ஸின் சிக்சரில் கிளாடியேட்டர்ஸை வீழ்த்தியது டீம் அபுதாபி!

Updated: Sun, Nov 21 2021 22:24 IST
Abu Dhabi T10: Danny Briggs' last-ball maximum powers Team Abu Dhabi to thrilling win (Image Source: Google)

டி10 லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் டீம் அபுதாபி - டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டீம் அபுதாபி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி தொடக்கத்திலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, அடுத்து ஜோடி சேர்ந்த வாநிந்து ஹசரங்கா - ஓடேன் ஸ்மித் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.

இதன்மூலம் 10 ஓவர்கள் முடிவில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஓடேன் ஸ்மித் 34 ரன்களையும், வநிந்து ஹசரங்கா 30 ரன்களையும் சேர்த்தனர். 

அதன்பி இலக்கை துரத்திய அபுதாபி அணிலும் பால் ஸ்டிர்லிங், லிவிங்ஸ்டோன், பிலிப் சால்ட், காலின் இங்ராம் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

இதனால் கடைசி பந்தில் டீம் அபுதாபி அணி வெற்றிபெற 5 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. அதனை எதிர்கொண்ட டேனி பிரிக்ஸ் சிக்சர் விளாசி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். 

Also Read: T20 World Cup 2021

இதன்மூலம் டீம் அபுதாபி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜெமி ஓவர்டன் 33 ரன்களையும், டேனி பிரிக்ஸ் 19 ரன்களையும்ச் சேர்த்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை