டி10 லீக்: குர்பாஸ் அதிவேக அரைசதம்; சென்னையை பந்தாடியது டெல்லி!

Updated: Thu, Dec 02 2021 09:18 IST
Abu Dhabi T10: Gurbaz's fastest fifty helps Delhi Bulls register win (Image Source: Google)

டி10 லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 28ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி புல்ஸ் - சென்னை பிரேவ்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய சென்னை அணியில் ஷசாத் 5 ரன்னிலும், ராஜபக்ஷ ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின் வந்த கேப்டன் பெரேரா 40 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

பின்னர் வந்த வீரர்களும் சரிவர விளையாடததால் 10 ஓவர்கள் முடிவில் சென்னை பிரேவ்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

அதன்பின் எளிய இலக்கைத் துரத்திய டெல்லி புல்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - சந்தர்பால் ஹெம்ராஜ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 14 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் டெல்லி புல்ஸ் அணி 4.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை பிரேவ்ஸ் அணியை வீழ்த்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை