டி10 லீக்: ஸஸாய் அதிரடியில் பங்களா டைகர்ஸ் அசத்தல் வெற்றி!

Updated: Sun, Nov 28 2021 09:46 IST
Abu Dhabi T10: Hasaranga's guile Banton's blitz hand Gladiators their fifth win (Image Source: Google)

டி10 லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 20 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை பிரேவ்ஸ் - பங்களா டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பங்களா டைகர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய சென்னை பிரேவ்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக முகமது ஷசாத் 32 ரன்களைச் சேர்த்தார். 

அதன்பின் இலக்கை துரத்திய பங்களா டைகர்ஸ் 5.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை பிரேவ்ஸை வீழ்த்தி அசத்தியது. இதில் அதிகபட்சமாக ஹஸ்ரதுல்லா ஸஸாய் 46 ரன்களைச் சேர்த்தார்.

அதேபோல் நேற்று நடைபெற்ற மற்றோரு லீக் ஆட்டத்தில் டெல்லி புல்ஸ் - டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய டெல்லி புல்ஸ் அணி 94 ரன்களைச் சேர்த்தது. 

அதன்பின் விளையாடிய டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 6.1 ஓவாரிலேயே இலக்கை எட்டி அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை