டி10 லீக்: புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!

Updated: Mon, Nov 29 2021 10:27 IST
Abu Dhabi T10: Odean Smith's blazing innings takes Deccan Gladiators to table's top (Image Source: Google)

டி10 லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 23ஆவது லீக் அட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் - நார்த்தன் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக முடிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி ஓடின் ஸ்மித்தின் அதிரடியான அட்டத்தினால் 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களைச் சேர்த்தது. இதில் ஓடின் ஸ்மித் 33 ரன்களைச் சேர்த்தார். 

பின்னர் இலக்கைத் துரத்திய வாரியர்ஸ் அணிக்கு கென்னர் லூயிஸ், மொயின் அலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் இருவரும் தலா 22 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். 

இதனால் 10 ஓவர்கள் முடிவில் வாரியர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் கிளாடியேட்டர்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியதுடன், டி10 லீக் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை