ஐபிஎல் ஆல் டைம் லெவனை தேர்வு செய்த கில்கிறிஸ்ட், பொல்லாக்; ரோஹித்திற்கு இடமில்லை!

Updated: Tue, May 06 2025 12:46 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், மீதமுள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்காக கடுமையாக போராடி வருகின்றன. 

இதனால் இந்த ஐபிஎல் தொடரில் எந்த நானுகு அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் இருவரும் இணைந்து தங்களுடையை ஆல் டைம் ஐபிஎல் லெவனைத் தேர்வு செய்து அறிவித்துள்ளனர். 

அதன்படி ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் ஷான் பொல்லாக் ஆகியோர் தேர்வு செய்திருக்கும் இந்த அணியில் மகேந்திர சிங் தோனியை கேப்டனாகக் கொண்டு தங்கள் லெவனைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஐபிஎல் தொடரில் எம் எஸ் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இது மட்டுமல்லாமல், 43 வயதான அவர் தற்போதும் ஐபிஎல் விளையாடி வருவதுடன், 270-க்கும் மேற்பட்ட ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்.

இருப்பினும், கில்கிறிஸ்ட் மற்றும் பொல்லாக் ஜோடி மகேந்திர சிங் தோனியை தங்கள் அணியின் கேப்டனாகத் தேர்ந்தெடுத்தாலும், மறுபுறம், தோனியைப் போலவே ஐந்து முறை ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவுக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்காதது ஆச்சரியமளிக்கிறது, ஏனெனில் சமீபத்தில் தான் ரோஹித் தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

அது மட்டுமல்லாமல், ஒரு பேட்ஸ்மேனாக தனது அணியை போட்டியை வெல்ல வைக்கும் திறனும் அவருக்கு உள்ளது, அதை அவர் பலமுறை செய்தும் காட்டியுள்ளார். இப்படியான சூழ்நிலையில் கில்கிறிஸ்ட் மற்றும் பொல்லாக் இருவரும் அவரை லெவனில் சேர்க்கவில்லை என்பது சற்று பாரபட்சத்தை கட்டுவதாக ரசிகர்கள் கருத்து தேரிவித்து வருகின்றனர். மேற்கொண்டு இந்த அணியில் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் விராட் கோலியைத் தேர்வு செய்துள்ளனர். 

பின்னர் மூன்றாம் வரிசையில் சுரேஷ் ரெய்னாவும், நான்காம் இடத்தில் ஏபிடி வில்லியர்ஸையும், ஐந்தாம் இடத்தில் சூர்யாகுமார் யாதாவையும், 6ஆம் இடத்தில் எம்எஸ் தோனியையும் தேர்வு செய்த அவர்கள் அணியின் ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, சுனில் நரைன் ஆகியோரையும், பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா, யுஸ்வேந்திர சஹால் ஆகியோரையும் தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் ஷான் போலாக் தேர்வு செய்த ஆல் டைம் ஐபிஎல் லெவன்: கிறிஸ் கெய்ல், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஏபி டி வில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ், மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, சுனில் நரைன், ஜஸ்பிரிட் பும்ரா, லசித் மலிங்கா, யுஸ்வேந்திர சாஹல்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை