இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. மேலும் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. மேலும் இப்போட்டிக்காக இந்திய அணி இரண்டு பகலிரவு பயிற்சி போட்டிகளிலும் விளையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

மேற்கொண்டு பெர்த் மைதானத்தில் தொடரின் முதல் போட்டி நடைபெறும் என்று, இரண்டாவது டெஸ்ட் போட்டி பலிரவு ஆட்டமாக அடிலெய்டிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலும் நடைபெறவுள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது மெல்போர்னிலும், கடைசி போட்டியானது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற தனது கருத்தை ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இது ஒரு கடினமான போட்டித் தொடராக இருக்கும் என்று நினைக்கிறேன். உள்நாட்டில் தாங்கள்தான் ஆதிக்க சக்தி என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ஆஸ்திரேலியாவுக்கு உள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று வெற்றி பெறுவது எப்படி என்பது இந்தியாவுக்குத் தெரியும். இந்த நேரத்தில் அவர்களின் வேகப்பந்து வீச்சு வரிசை உலகின் சிறந்த வீரர்களுக்கு இணையாக உள்ளது.

அவர்கள் இங்குள்ள நிலைமைகளை அனுபவிக்கப் போகிறார்கள். அதுமட்டுமின்றி, அவர்கள் மிகவும் திறமையான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளனர். இது மிக மிக கடினமான தொடராக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இருப்பினும் இத்தொடரின் வெற்றியாளராக நான் ஆஸ்திரேலியாவை கணிக்கிறேன். ஏனெனில் இம்முறை அவர்கள் வெற்றியின் பக்கம் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் இந்தியாவும் சரிசமமாக போட்டியிடும் என்று நம்புகிறேன். அதனால் இத்தொடரில் இரு அணிகளுக்கும் இடையே நெருக்கமான சண்டையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிங்கி பாண்டிங்கும் எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியானது 3-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெறும் என்று கணித்திருந்தார். இந்நிலையில் தற்போது ரிக்கி பாண்டிங்கும் அதே கருத்தை முன்வைத்துள்ளார். ஆனால் கடந்த இரண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியானது ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அசத்தியதுடன், மூன்றாவது முறையாகவும் அதனை செய்ய காத்திருப்பதால் இத்தொடர் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

பார்டர் - கவாஸ்கர் தொடர் போட்டி அட்டவணை

  • முதல் டெஸ்ட் - பெர்த் - நவம்பர் 22 - 26
  • இரண்டாவது டெஸ்ட் (பகலிரவு) - அடிலெய்ட் ஓவல் - டிசம்பர் 06-10
  • மூன்றாவது டெஸ்ட் - பிரிஸ்பேன் - டிசம்பர் 14-18
  • நான்காவது டெஸ்ட் (பாக்ஸிங் டே) - மெல்போர்ன் - டிசம்பர் 26-30
  • ஐந்தாவது டெஸ்ட் (புத்தாண்டு டெஸ்ட்) - சிட்னி - ஜனவரி 03-07(2025) 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News