இங்கிலாந்து அணிக்காக புதிய வரலாறு படைத்த ஆதில் ரஷித்!

Updated: Sun, Sep 22 2024 09:25 IST
Image Source: Google

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 74 ரன்களையும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 60 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில்  பிரைடன் கார்ஸ் 3 விகெட்டுகளையும், மேத்யூ பாட்ஸ், ஆதில் ரஷீத், ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 271 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பென் டக்கட் மெற்றும் மிடில் ஆர்டரில் விளையாடிய ஜேமி ஸ்மித அகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 202 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இதில் அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 49 ரன்களையும், பென் டக்கெட் 32 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட், ஆரோன் ஹார்டி மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதுடன், ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவினாலும், அந்த அணியின் நட்சத்திர வீரர் ஆதில் ரஷித் புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார். இப்போட்டியில் அவர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 200 விக்கெட்டுகளையும் நிறைவுசெய்திருந்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் வரலாறையும் ஆதில் ரஷித் படைத்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

இந்த பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயீன் அலி 111 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்திலும், முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் 104 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இங்கிலாந்து அணிக்காக இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது வீரர் எனும் பெருமையையும் ஆதில் ரஷித் பெற்றுள்ளார். இதற்கு முன் ஜிம்மி ஆண்டர்சன் மற்றும் டேரன் கௌக் மட்டுமே ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக 200 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை