பிளிண்டாஃபின் வாழ்நாள் சாதனை முறியடிக்க காத்திருக்கும் ஆதில் ரஷித்!

Updated: Wed, Nov 06 2024 09:09 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்து அசத்தியுள்ளன. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது இன்று பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதன் காரணமாக இப்போட்டியில் வெற்றிபெறும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும்.

இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக புதிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

அந்தவகையில், இந்தப் போட்டியில்  ரஷித் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால், சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஆண்ட்ரூ பிளின்டாஃப்பை பின்னுக்கு தள்ளி ஏழாவது இடத்தை பிடிப்பார். ஆதில் ரஷித் இதுவரை 277 போட்டிகளில் 282 இன்னிங்ஸ்களில் விளையாடி 387 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம் ஆண்ட்ரூ பிளின்டாஃப் 223 போட்டிகளில் 258 இன்னிங்ஸ்களில் விளையாடிய 392 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ரஷித் தனது கணக்கில் மூன்று விக்கெட்டுகளை ம்ட்டுமே வீழ்த்தியுள்ளார். இந்த தொடருக்கு பிறகு இரு அணிகளுக்கும் இடையே ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெற உள்ளது. இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆதில் ரஷித் இந்த எண்ணிக்கையை எட்டவில்லை என்றாலும் கூட் அவர் எதிவரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்த இலக்கை எட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன், டி20 தொடரில் மட்டும்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், ஜாஃபர் சோஹன், சாம் கரன், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை