Afghanistan vs Bangladesh 2nd ODI Dream11 Prediction: அஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் வங்கதேச அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது நேற்று முன் தினம் ஷார்ஜாவில் நடந்து முடிந்தது. இப்போட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஃப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement

இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் ஆஃப்கானிஸ்தான் அணியும், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வங்கதேச அணியும் இப்போட்டியை எதிர்கொள்கின்றன. இதில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Advertisement

AFG vs BAN 2nd ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம்
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
  • நேரம் - நவம்பர் 9, மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

AFG vs BAN 2nd ODI Pitch Report

ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 261 போட்டிகள் நடந்துள்ள நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 137 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 122 முறையும் வெற்றி கண்டுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 223 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 364 ரன்கள் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லு அணி முதாலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

AFG vs BAN 2nd ODI: Where to Watch?

Advertisement

ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன் கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

AFG vs BAN ODI Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 17
  • ஆஃப்கானிஸ்தான் - 11
  • வங்கதேசம் - 06
  • முடிவில்லை - 00

Afghanistan vs Bangladesh 2nd ODI Probable Playing XI

Advertisement

ஆஃப்கானிஸ்தான் உத்தேச லெவன்: ரெஹ்மானுல்லா குர்பாஸ், செதிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி, குல்பாடின் நைப், ரஷித் கான், அல்லா கஸான்ஃபர், நங்கேலியா கரோட், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.

வங்கதேச உத்தேச லெவன்: தன்ஸீத் ஹசன், சௌமியா சர்க்கார், தாவ்ஹித் ஹிரிடோய், நஜ்முல் ஹுசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல்லா, முஷ்ஃபிக்கூர் ரஹீம், மெஹதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹுசைன், தஸ்கின் அகமது, முஸ்தஃபிசூர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்.

AFG vs BAN 2nd ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்ஸ்மேன் - நஜ்முல் ஹுசைன் சாண்டோ, ஹஸ்மதுல்லா ஷாஹிதி
  • ஆல்-ரவுண்டர்கள் - முகமது நபி (துணைக்கேப்டன்), சௌமியா சர்க்கார், அஸ்மத்துல்லா ஒமர்சாய், மெஹ்தி ஹசன் மிராஜ் (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - முஸ்தஃபிசூர் ரஹ்மான், ரஷித் கான் (துணை கேப்டன்), அல்லா கஸான்ஃபர், தஸ்கின் அகமது
Advertisement

AFG vs BAN 2nd ODI Dream11 Prediction, AFG vs BAN Dream11 Prediction, Today Match AFG vs BAN, AFG vs BAN ODI Series, AFG vs BAN Dream11 Team, Fantasy Cricket Tips, AFG vs BAN Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Afghanistan vs Bangladesh

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News