ஆசிய கோப்பை 2025: ஆஃப்கானிஸ்தான்vs ஹாங்கா - வெற்றியுடன் தொடங்குவது யார்?
AFG vs HKG 1st T20I, Cricket Tips: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஃப்கானிஸ்தான் அணி வலிமை வாய்ந்ததாக பார்க்கப்படுவதால், அவர்களைச் சமாளித்து ஹாங்காங் அணியால் வெற்றி பெற முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
AFG vs HKG: Match Details
- மோதும் அணிகள் - ஹாங்காங் vs ஆஃப்கானிஸ்தான்
இடம் - ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானம், அபுதாபி
நேரம்- செப்டம்பர் 09, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)
AFG vs HKG: Live Streaming Details
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம், அதேசமயம், சோனி லிவ் ஓடிடி தளத்தில் இத்தொடர் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
AFG vs HKG: Head-to-Head in T20Is
- Total Matches: 5
- Afghanistan: 3
- Hong Kong: 2
- No Result: 0
AFG vs HKG: Ground Pitch Report
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ஷேக் சாயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 90 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன, இதில் 49 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 49 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 136 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 225 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
AFG vs HKG: Possible XIs
Afghanistan: இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், அஸ்மத்துல்லா உமர்சாய், தர்வீஷ் ரசூலி, கரீம் ஜனத், ரஷீத் கான் (கேப்டன்), முகமது நபி, ஏ.எம். கசன்பர், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபரூக்கி
Hong Kong: பாபர் ஹயாத், அன்ஷுமன் ராத், நிஜாகத் கான், யாசிம் முர்தாசா (கேப்டன்), ஜீஷன் அலி, கிஞ்சித் ஷா, கல்ஹான் சல்லு, எஹ்சன் கான், அதீக் இக்பால், ஆயுஷ் சுக்லா, நஸ்ருல்லா ராணா
AFG vs HKG: Player to Watch Out For
Probable Best Batter: Ibrahim Zadran (Afghanistan)
தற்சமயம் ஆஃப்கானிஸ்தான் அணியில் இப்ராஹிம் சத்ரான் தொடர்ந்து ரன்களைக் குவித்து வருகிறார். மேலும் அவர் கடந்த முத்தரப்பு டி20 தொடரிலும் அபாரமாக செயல்பட்டுள்ளதால், இந்த போட்டியிலும் ரன்களைச் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Probable Best Bowler: Rashid Khan (Afghanistan)
பந்துவீச்சில் ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் சிறப்பாக செயல்பட்டுள்ளர். அவர் இந்த தொடரில் இதுவரை 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Today's Match Prediction: இந்த போட்டியை பொறுத்தவரையில் ஆஃப்கானிஸ்தான் அணி அதிக அனுபவம் கொண்டுள்ளதல், அந்த அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
Also Read: LIVE Cricket Score
AFG vs HKG Match 1st T20I Prediction Asia Cup 2025, AFG vs HKG Pitch Report, Today's Match AFG vs HKG, AFG vs HKG Prediction, AFG vs HKG Predicted XIs, Cricket Tips, AFG vs HKG Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Pitch Report, Injury Update of the match between Afghanistan vs Hong Kong