ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது ஒருநாள் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Afghanistan and South Africa 2nd ODI, Dream11 Prediction: ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளௌயாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிபெற்று தொடரை வெல்லும் உத்வேகத்துடன் ஆஃப்கானிஸ்தான் அணியும், முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணியும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
AFG vs SA 2nd ODI: Match Details
- மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா
- இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம், ஷார்ஜா
- நேரம் - செப்டம்பர் 20, மாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)
AFG vs SA 2nd ODI Live Streaming Details
ஆஃப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலை ஒளிபரப்பு செய்யவில்லை. இருப்பினும் இத்தொடரை ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் ரசிகர்கள் நேரலையில் கண்டுகளிக்கலாம்.
AFG vs SA: Head-to-Head In ODIs
- மோதிய போட்டிகள் - 03
- தென் ஆப்பிரிக்கா - 02
- ஆஃப்கானிஸ்தான் - 01
- முடிவில்லை - 00
AFG vs SA: Ground Pitch Report
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 257 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 135 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 120 முறை பந்துவீச்சை தேர்வு செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரானது 223 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோரானது 191 ரன்களாவும் உள்ளது. இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 364 ரன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
Afghanistan and South Africa Possible XIs
ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேட்ச்), முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய், குல்பாடின் நைப், ரஷித் கான், அல்லா கசன்ஃபர், ஃபசல்ஹக் ஃபரூக்கி, நங்கேயாலியா கரோத்.
தென் ஆப்பிரிக்கா: டெம்பா பவுமா (கே), ஐடன் மார்க்ரம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டோனி டி ஸோர்ஸி, ஜேசன் ஸ்மித், வியான் முல்டர், அண்டில் பெஹ்லுக்வாயோ, கைல் வெர்ரைன், நந்த்ரே பர்கர், லுங்கி இங்கிடி, ஜார்ன் ஃபோர்டுயின்.
AFG vs SA 2nd ODI: Dream11 Team
- விக்கெட் கீப்பர்: ரஹ்மானுல்லா குர்பாஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
- பேட்டர்ஸ்: ரஹ்மத் ஷா, டெம்பா பவுமா (கேப்டன்)
- ஆல்-ரவுண்டர்கள்: முகமது நபி, வியான் முல்டர்,அண்டில் பெஹ்லுக்வாயோ, அஸ்மத்துல்லா ஒமர்சாய் (துணை கேப்டன்)
- பந்துவீச்சாளர்கள்: ரஷித் கான், லுங்கி இங்கிடி, ஃபசல்ஹக் ஃபரூக்கி.
AFG vs SA 2nd ODI Dream11 Prediction, Today Match AFG vs SA, AFG vs SA Dream11 Team, Fantasy Cricket Tips, AFG vs SA Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Afghanistan and South Africa
Also Read: Funding To Save Test Cricket
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.