ஆசிய கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; ரஷித் கான் கேப்டனாக நியமனம்!

Updated: Tue, Aug 05 2025 20:04 IST
Image Source: Google

Afghanistan Preliminary Squad For T20 Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடருக்கான முதற்கட்ட அணியை ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில், அணியின் கேப்டனாக ரஷித் கான் நியாமிக்கப்பட்டுள்ளார். 

ஆசிய கிரிக்கெட் சங்கத்தில் சார்பில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாள், ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் விளையாடுவது வழக்கம். மேலும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறும் போது இத்தொடரானது ஒருநாள் வடிலும், டி20 உலகக்கோப்பை தொடரின் போது டி20 வடிவிலும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நடப்பு ஆசிய கோப்பை தொடரானது டி20 வடிவில் எதிவரும் செப்டம்பர் மாதம் முதல் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இந்தாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது யுஏஇ-ல் எதிர்வரும் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி, இறுதிப்போட்டியானது செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இந்நிலையில் ஆசிய கோப்பை மற்றும் யுஏஇ முத்தரப்பு டி20 தொடர்களுக்கான முதற்கட்ட ஆஃப்கனிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆஃப்கானிஸ்தன் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் பயிற்சி முகாமுக்கான முதற்கட்ட அணியை ஏசிபி அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேசிய தேர்வுக் குழு, வரவிருக்கும் முத்தரப்பு தொடர் மற்றும் ஏசிசி ஆண்கள் டி20 ஆசியக் கோப்பைக்கு முன்னதாக இரண்டு வார பயிற்சி மற்றும் தயாரிப்பு முகாமில் இடம்பெறும் 22 பேர் கொண்ட முதற்கட்ட அணியை இறுதி செய்துள்ளது” என்று கூறியுள்ளது. மேலும் இந்த அணியின் கேப்டனாக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுதவிர்த்து ரஹ்மனுல்லா குர்பாஸ், செதிகுல்லா அடல், இப்ராஹிம் ஸத்ரான், முகமது நபி, குல்பதின் நைப், அஸ்மதுல்லா ஒமர்ஸாய், அல்லா கசான்ஃபர், நூர் அஹ்மத், நவீன் உல் ஹக் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் இந்த அணியில் முஜீப் உர் ரஹ்மானுக்கு இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து இதிலிருந்து சிறப்பான 15 வீரர்களை ஆஃப்கானிஸ்தன் கிரிக்கெட் வாரியம் தேர்வுசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

ஆஃப்கானிஸ்தான் அணி: ரஷித் கான் (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ், செதிகுல்லா அடல், வஃபியுல்லா தாரகில், இப்ராஹிம் ஸத்ரான், தர்வீஷ் ரசூலி, முகமது இஷாக், முகமது நபி, நங்யால் கரோட்டி, ஷரபுதீன் அஷ்ரப், கரீம் ஜனத், அஸ்மத்துல்லா ஒமர்சாய், குல்பதின் நைப், முஜீப் ஸத்ரான், அல்லா கசன்பர், நூர் அஹ்மத், ஃபசல்ஹக் ஃபரூக்கி, நவீன்-உல்-ஹக், ஃபரித் மாலிக், சலீம் சஃபி, அப்துல்லா அஹ்மத்சாய், பஷீர் அகமது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை