AFG vs NZ, Only Test: ஈரப்பதம் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது!

Updated: Tue, Sep 10 2024 20:23 IST
Image Source: Google

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது நேற்று நெய்டாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் மைதானத்தில் தொடங்கியது. உலக கிரிக்கெட் வரலாற்றில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அசத்தும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

அதன்படி நேற்று தொடங்க இருந்த இந்த போட்டியானது ஈரப்பதம் மற்றும் மோசமான வானிலை காரணமாக டாஸ் நிகழ்வானது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. பின்னர் மைதானத்தில் ஈரப்பதமானது தொடர்ந்து இருந்து வந்த காரணத்தால் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று தொடங்க இருந்த இரண்டாம் நாள் ஆட்டமும் ஈரப்பதம் காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது. 

நேற்றைய தினமே மைதானத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற முடியாத நிலையில், இன்றைய தினமும் தண்ணீரை வெளியேற்ற முடியாததன் காரணமாக இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்விரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி என்பதால் ரசிகர்கள் கூடுதல் அவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இரண்டு நாள் ஆட்டமும் முழுவதுமாக கைவிடப்பட்டள்ளது பெரும் ஏமாற்றமத்தைக் கொடுத்துள்ளது. 

ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா, அப்துல் மாலிக், ரியாஸ் ஹசன், அப்சர் ஸசாய், இக்ராம் அலிகில், பஹீர் ஷா மஹ்பூப், ஷாஹிதுல்லா கமால், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஷம்ஸ் உர் ரஹ்மான், ஜியா உர் ரஹ்மான் அக்பர், ஜாஹிர் கான் பக்தீன், கைஸ் அஹ்மத், கலீல் அஹ்மத், நிஜாத் மசூத்.

Also Read: Funding To Save Test Cricket

நியூசிலாந்து டெஸ்ட் அணி: டிம் சௌதீ (கே), டாம் பிளென்டல், மைக்கேல் பிரேஸ்வெல், டெவான் கான்வே, மேட் ஹென்றி, டாம் லேதம், டேரில் மிட்செல், வில்லியம் ஓ ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை