ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. 

Advertisement

இதில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs ஸ்காட்லாந்து
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம் 

முகமது நபி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் பல வெற்றிகளை குவித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் ரஷித் கான், முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தான். 

அதேபோல் பேட்டிங்கில் ஹஸ்ரதுல்லா ஸஸால், முகமது ஷசாத், ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் அதிரடி ஆட்டத்தில் மிரட்டி வருவதும், பந்துவீச்சில் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் இருப்பதும் அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்துகிறது. 

Advertisement

அதேசமயம் கைல் கொட்சர் தலைமையிலான ஸ்காட்லாந்து அணியும் நடப்பு உலகக்கோப்பை முதல் சுற்று போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

இதனால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 6
  • ஆஃப்கானிஸ்தான் வெற்றி - 6
  • ஸ்காட்லாந்து - 0
Advertisement

உத்தேச அணி
ஆப்கானிஸ்தான் -
முகமது ஷசாத், ஹஸ்ரத்துல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், கரீம் ஜனத், அஸ்கர் ஆஃப்கான், நஜிபுல்லா ஜத்ரன், முகமது நபி (கே), குல்பாடின் நைப், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக்.

ஸ்காட்லாந்து - ஜார்ஜ் முன்சி, கைல் கோட்சர் (கே), மேத்யூ கிராஸ் , ரிச்சி பெர்ரிங்டன், கலம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், ஜோஷ் டேவி, சஃப்யான் ஷெரீப், பிராட்லி வீல்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர் - முகமது ஷாசாத்
  • பேட்டர்ஸ் - கலம் மக்லியோட், ஜார்ஜ் முன்சி, ஹஸ்ரத்துல்லா ஸஸாய், நஜிபுல்லா-சத்ரான்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரிச்சி பெர்ரிங்டன், கிறிஸ் கிரீவ்ஸ், முகமது நபி
  • பந்துவீச்சாளர்கள் - மார்க் வாட், ஜோஷ் டேவி, ரஷித்-கான்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News