ஐசிசி உலக கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி நடப்பு தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட் களையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக மஹ்முதுலா 56 ரன்களைச் சேர்த்தார். 

Advertisement

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஸமான் 81 ர்னகளையும், அப்துல்லா ஷஃபிக் 68 ரன்களையும் விளாசி வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 32.3 ஓவரில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. மேலும் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த ஃபகர் ஸமான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

Advertisement

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ஃபகர் ஸமான், “ஆசிய கோப்பை தொடருக்கு பின்னர் நான் என்னுடைய பேட்டிங்கில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டேன். இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் நான் இடம்பெற்று என்னுடைய சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதை எதிர்நோக்கி காத்திருந்தேன்.

அந்த வகையில் நான் எடுத்த கடின பயிற்சிகளுக்கெல்லாம் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன். எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் நான் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன். முதல் சில ஓவர்களில் நாங்கள் பந்தினை பார்த்து மைதானத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது என்று கணித்து அதிரடியாக ஆட நினைத்தோம். அந்த வகையில் நான்கு ஓவர்களுக்கு பிறகு பெரிய ஷாட்களை விளையாட முடிந்தது. எங்களது அணியில் என்னுடைய ரோல் மிகவும் தெளிவாக இருக்கிறது.

அதாவது நான் ரன் குவிப்பை வேகப்படுத்தி எதிரில் உள்ள வீரர்களை ப்ரீயாக அழுத்தமின்றி விளையாட வைக்க வேண்டும் என்பது மட்டும்தான். எனவே 100 ரன்களை கடந்த பிறகு நாங்கள் 30 ஓவருக்குள் போட்டியை முடிக்க நினைத்து அதிரடியாக விளையாடினோம். கடந்த காலங்களில் எனக்கு நிறைய பேட்டிங் தோல்விகள் இருந்திருக்கின்றன. ஆனால் இனிவரும் போட்டிகளில் நான் பெரிய ஸ்கோரை அடிக்க விரும்புகிறேன்” என கூறியுள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News