இந்தியாவில் சுழற்பந்து வீச்சில் மட்டும் ஆபத்து இல்லை - அலெக்ஸ் கேரி எச்சரிக்கை!

Updated: Sat, Feb 04 2023 20:58 IST
Alex Carey reminds Australia of Indian fast bowlers’ reverse swing threat amid spin talk (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி வரும் 9ஆம் தேதி நாக்பூரில் நடைபெறவுள்ளது.

இத்தொடருக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்தியவின் கிரிக்கெட் மைதானங்கள் குறித்தான விமர்சனங்கள் வலுக்க தொடங்கியுள்ளன. அத்துடன் ஆஸ்திரேலிய அணி பயிற்சி போட்டிகளையும் தவிர்துள்ளது விமர்சங்களுக்கு வித்திட்டது.

இந்நிலையில், இந்தியாவில் சுழற்பந்து வீச்சில் மட்டும் ஆபத்து இல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் கேரி சக அணி வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “பாகிஸ்தானில் நாங்கள் விளையாட செல்லும் போது இதே போல் தான் சுழற் பந்து வீச்சு குறித்து நிறைய பேசப்பட்டது. ஆனால் அங்கு வேகப்பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். பந்து அங்கு நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆனது.இதேபோல் நான் இந்தியாவில் ஏற்கனவே ஒரு முறை டெஸ்ட் போட்டியில் விளையாடியிருக்கிறேன்.

2018 ஆம் ஆண்டு இந்திய ஏ அணியை எதிர்கொண்டு ஆஸ்திரேலிய ஏ அணி சார்பாக நான்கு நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் விளையாடியிருக்கிறேன். அப்போது இதே போல் தான் சுழல் பந்துவீச்சு குறித்து பேசப்பட்டது. ஆனால் முகமது சிராஜ் அந்த ஆட்டத்தில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நாங்கள் அப்போது சுழற் பந்துவீச்சு மட்டுமே கவனம் செலுத்தினோம். ஆனால் வேகப்பந்துவீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் வைத்து விக்கெட்களை வீழ்த்துவார்கள் என்பதை நாங்கள் மறந்து விட்டோம்.

இந்தியாவில் உள்ள விக்கெட்டுகள் நிச்சயம் ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு உதவும். இதேபோன்று கடந்த ஆண்டு நாங்கள் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடினோம். அங்கு காலேவில் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இரண்டுக்குமே வேறு வேறு ஆடுகளம் அமைக்கப்பட்டது. எனவே என்னுடைய அறிவுரை எல்லாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். ஆடுகளங்களில் விளையாடும் போது எப்படி வேண்டுமானாலும் அது செயல்படும். சுழற் பந்துவீச்சுக்கும் வேகபந்துவீச்சுக்கும் ஏற்ற வகையில் தான் ஆடுகளம் இருக்கும். அதை போல் பேட்டிங் இருக்கு சாதகமாகவும் இந்திய ஆடு களங்கள் இருக்கும்.

எங்களுக்கு இந்தியாவில் விளையாடிய அனுபவம் இருப்பது நிச்சயம் சாதகமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஏற்கனவே விளையாடிய வீரர்கள் குறித்து அவர்களுடைய அனுபவத்தை நாங்கள் கேட்க உள்ளோம். அதற்காக ஒரு ஆலோசனை கூட்டத்தை அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த வாரம் முழுவதும் இன்னும் நிறைய சுழற் பந்துவீச்சை வலைப்பயிற்சியில் எதிர்கொள்ள இருக்கிறோம். இதுவரை நாங்கள் எப்படி சுழல் பந்துவீச்சை எதிர்கொள்ள போகிறோம் என்பது குறித்து இந்த திட்டத்தையும் வகுக்க வில்லை.

என்னை கேட்டால் அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட திறமையை வைத்து விளையாட வேண்டும். டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடக்கூடியவர். ரெண்சா தனது உயரத்தை பயன்படுத்தி பந்து எங்கே வருகிறதோ அதனை அடிப்பார். நான் நிறைய ஸ்வீப் ஷாட் ஆடி நன்களை சேர்ப்பேன். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திட்டம் இருக்கும். இந்த டெஸ்ட் போட்டியில் எப்போதும் நாம் ஜொலிக்க முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சில சமயம் விக்கெட்டுகள் விழும். சில சமயம் நமக்கு சரிவு கிடைக்கும். இந்த சூழ்நிலைகள் எல்லாம் நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை பொறுத்து வெற்றி கிட்டும். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடினால் சாதகமாக முடிவு இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை