Alex Hales Record: டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையிலும் புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். 

Advertisement

டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி லீக் போட்டி இன்று டல்லாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணியில் ஷுப்மன் ரஞ்சனே 70 ரன்களையும், டோனவன் ஃபெரீரா 43 ரன்களையும் சேர்த்ததன் மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணியில் உன்முக்த் சந்த் 30 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 26 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் சூப்பர் கிங்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய அலெக்ஸ் ஹேல்ஸ் ஒரு பவுண்டரியுடன் 5 ரன்களை மட்டுமே சேர்த்து விக்கெட்டை இழந்தாலும் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் அவர் ஒரு பவுண்டரியை அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது 1500ஆவது பவுண்டரியை பூர்த்தி செய்தார். இதன்மூலம் இந்த சாதனையைப் படைத்தா உலகின் முத்ல் வீரர் எனும் வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

அலெக்ஸ் ஹேல்ஸ் இதுவரை 501 டி20 போட்டிகளில் 497 இன்னிங்ஸ்களில் விளையாடி இந்த சாதனையைப் படைத்துள்ளார். அவருக்குப் பிறகு, டி20 கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் வின்ஸின் 438 டி20 போட்டிகளில் 426 இன்னிங்ஸ்களில் 1,373 பவுண்டரிகளை அடிது இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 413 இன்னிங்ஸ்களில் 1364 பவுண்டரிகளுடான் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகள் அடித்த வீர்ர்கள் 

  • 1,500* – அலெக்ஸ் ஹேல்ஸ் (497 இன்னிங்ஸ்)
  • 1,373 – ஜேம்ஸ் வின்ஸ் (426 இன்னிங்ஸ்)
  • 1,364 – டேவிட் வார்னர் (413 இன்னிங்ஸ்)
  • 1,210 – விராட் கோலி (397 இன்னிங்ஸ்)
  • 1,196 – பாபர் அசாம் (309 இன்னிங்ஸ்)
Advertisement

Also Read: LIVE Cricket Score

அலெக்ஸ் ஹேல்ஸ் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலிலும் இரண்டாம் இடத்தில் உள்ளார். அவர் 501 டி20 போட்டிகளில் 497 இன்னிங்ஸ்களில் 7 சதங்கள் மற்றும் 86 அரைசதங்களுடன் 13,735 ரன்களை எடுத்துள்ளார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் 463 டி20 போட்டிகளில் 455 இன்னிங்ஸ்களில் 22 சதங்கள் மற்றும் 88 அரைசதங்களுடன் 14,562 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News