ஏழாவது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

Advertisement

முதல் சுற்றில் விளையாடும் 8 அணிகளில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்தப் போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகிறது. இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லருக்கு இது தான் முதல் உலக கோப்பை ஆகும். இந்த இந்த அணியில் அதிரடி ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோவ் முதலில் இடம் பெற்றிருந்தார். அணி அறிவிக்கப்பட்ட அடுத்த நாள் காயம் காரணமாக வருகிற 20 ஓவர் உலக கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக ஜானி பேர்ஸ்டோவ் அறிவித்திருந்தார். காயம் அடைந்த பேர்ஸ்டோவ்வுக்கு பதிலாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மாற்று வீர்ரை அறிவிக்காமல் இருந்தது.

இந்நிலையில், பேர்ஸ்டோவ்க்கு பதிலாக அலெக்ஸ் ஹேல்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அலெக்ஸ் ஹேல்ஸ் கடந்த 2019ஆம் ஆண்டுக்கு பின்னர் இங்கிலாந்து அணிக்கு திரும்பி உள்ளார். ஹேல்ஸ் இதுவரை 60 டி20 போட்டிகளில் விளையாடி 8 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News