ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அதன்படி பெர்த்தில் நேற்று முந்தினம் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி வீராங்கனைகள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

இதனால் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 31.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன், வெறும் 76 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய டார்சி பிரௌன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியதது. 

Advertisement

அதிலும் இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அனபெல் சதர்லேண்ட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். மேலும் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிவேக இரட்டை சதமாகவும் இது அமைந்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 575 ரன்களைச் சேர்த்து முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 499 ரன்கள் முன்னிலையும் பெற்றது.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணியில் கேப்டன் லாரா வோல்வார்ட் 8 ரன்களுக்கும், போஷ் ரன்கள் ஏதுமின்றியும், சுனே லூஸ் 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தார். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை மட்டுமே எடுத்தது. பின் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை தஸ்மின் பிரிட்ஸ் 18 ரன்களுடனும், டெல்மி டக்கர் 27 ரன்களுடனும் தொடர்ந்தனர்.

இதில் தஸ்மின் பிரிட்ஸ் 31 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த டெல்மீ டக்கர் - சோலே ட்ரையான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் டெல்மி டக்கர் 64 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 64 ரன்கள் எடுத்த நிலையில் சோலே ட்ரையானும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் சோபிக்க தவறினர். 

இதனால் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 215 ரன்களைச் சேர்த்து ஆல் ஆவுட்டானது. ஆஸ்திரேலிய தரப்பில் கிம் கார்த், டார்சி பிரௌன், ஆஷ்லே கார்ட்னர், அனபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்னிங்ஸ் மற்றும் 284 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தினர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News