கடந்த 2018இல் தென்னாப்பிரிக்க நாட்டில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடியது. அந்த பயணத்தில் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விதிகளுக்கு அப்பாற்பட்டு பந்தை உப்புக் காகிதம் கொண்டு தேய்த்த குற்றத்திற்காக அப்போதைய ஆஸி. அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பாங்கிராஃப்ட் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

Advertisement

அதே நேரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா, அணிக்கு கேப்டனாக தலைமை தாங்க வார்னருக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளதாக தெரிகிறது. அதை தான் நீக்க வேண்டும் என ஆலன் பார்டர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசிய அவர்,“பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் பந்தை சேதம் செய்து, ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு ஒத்துழைக்கும் வகையில் கொண்டு வருவதில் எந்த தவறும் இல்லை. என்ன அதை சோடா மூடி, உப்புக் காகிதம் போன்றவற்றை கொண்டு இல்லாமல் நேச்சுரலாக செய்ய வேண்டும். அப்படி செய்தால் அது குற்றத்தில் சேராது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர் அவர் செய்த குற்றத்திற்கும் கூடுதலாக தண்டனையை அனுபவித்து வருகிறார். அவர் தண்டனை காலம் முடிந்தது என்பதை கவனிக்க வேண்டும். எல்லா அணியும் இதை செய்துள்ளது, செய்கிறது. கையும் களவுமாக நாம் சிக்கிவிட்டோம். எங்கே மற்ற அணியின் கேப்டன்களை தங்கள் நெஞ்சில் கையை வைத்து ‘தாங்கள் இப்படி செய்யவில்லை’ என சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். அவர்கள் இல்லை என பொய் சொல்வார்கள்” என தெரிவித்துள்ளார்.

தற்போது 35 வயதான டேவிட் வார்னர் இப்போது டாப் கிளாஸ் ஃபார்மில் கிரிக்கெட் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News