என்னுடைய ஃபேவரைட் ஆர்சிபி தான் - கேஎல் ராகுல் ஓபன் டாக்!

Updated: Sat, Dec 23 2023 19:47 IST
Image Source: Google

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட கே. எல் ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சிறிது காலம் ஓய்வில் இருந்தார். ஓய்வுக்குப் பின் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பைத் தொடர்களில் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் தனது துல்லியமான ரிவ்யூக்கள் மூலம் கவனிக்க வைத்தார்.

பெங்களூரைச் சேர்ந்த கேஎல் ராகுல் முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில்தான் இடம்பெற்று ஐபிஎல் தொடரில் விளையாடினார். சிறப்பாக விளையாடிய இவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகம் தக்க வைத்துக்கொள்ளவில்லை. இதனையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்குச் சென்று கேப்டனாகச் செயல்பட்டார். தற்போது புதிய அணியான லக்னோ ஜெயின்ட்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். 

சிறந்த ஃபார்மில் இருக்கும் கேஎல் ராகுல், அடுத்ததாக டெஸ்ட் தொடரிலும் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த முறை தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் முழுக்க முழுக்க தோல்வியை சந்தித்த கேஎல் ராகுல், இம்முறை பதிலடி கொடுக்க தயாராகி வருகிறார். இந்த நிலையில் கேஎல் ராகுல், ஆர்சிபி அணியில் விளையாடிய நினைவுகளை பகிர்ந்துள்ளார். 

அதில், “2013ஆம் ஆண்டில் இருந்து அடுத்த 3 ஆண்டுகள் ஆர்சிபி அணிக்காக விளையாடி இருக்கிறேன். இளம் வயதிலேயே என் திறமையை வெளிப்படுத்த ஆர்சிபி அணி நிர்வாகம் எனக்கு வாய்ப்பை அளித்தது. நான் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவன் என்பதால், ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட போதே ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

 

அதன்பின் என் ஆசைபடியே ஆர்சிபி அணிக்காக விளையாடியது எனது அதிர்ஷ்டம். ஆர்சிபி அணியில் இருந்து இப்போது விலகினாலும், எப்போதும் மனதளவில் நெருக்கமான அணி” என்று தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணிக்கு விளையாடியதன் மூலமாகவே கேஎல் ராகுலுக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை