கார் விபத்தில் சிக்கிய முன்னாள் இங்கிலாந்து கேப்டன்!
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ பிளின்டாஃப். இவர், சர்ரேயில் தனியார் தொலைக்காட்சியின் படப்பிடிப்பின் போது பயங்கர கார் விபத்தில் சிக்கியதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தற்போது 45 வயதான அவர் விமானம் மூலமா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
இதுகுறிந்து அந்த தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று காலை டாப் கியர் சோதனைப் பாதையில் நடந்த விபத்தில் பிலின்டாஃப் காயமடைந்தார். குழு மருத்துவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றனர் மேலும் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மேலும் விவரங்களை சரியான நேரத்தில் உறுதிப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக ஆண்ட்ரூ பிளின்டாஃப் 2019 ஆம் ஆண்டில் நிகழ்ச்சியின் இணை தொகுப்பாளராகத் தொடங்கியதிலிருந்து விபத்தில் சிக்கியுள்ளார். 2019 ஆம் ஆண்டில், இணை தொகுப்பாளர்களான கிறிஸ் ஹாரிஸ் மற்றும் பேடிக்கு எதிராக மணிக்கு 124 மைல் வேகத்தில் பந்தயத்தில் ஈடுபட்டபோது, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இங்கிலாந்து அணிக்காக 79 டெஸ்ட் மற்றும் 141 சர்வதேச போட்டிகளில் விளையாடிய பிளின்டாஃப், 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் அவர் கிரிக்கெட் வர்ணனை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருவது குறிப்பிடத்தக்கது.