ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் - ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்ற ஹெட், சதர்லேண்ட்!
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களை கௌரவிக்கும் விதமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் கடந்த 2024ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய வீரர் வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழாவானது மெல்போர்னில் நடைபெற்றது.
இதில் கடந்த ஆண்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்டின் சிறந்த ஆடவர் வீரருக்கான ஆலன் பார்டர் விருதை ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டிற்கும், சிறந்த வீராங்கனைக்கான பிளண்ட கிளார்க் விருதை அனபெல் சதர்லேண்ட் ஆகியோர் படைத்துள்ளனர். முன்னதாக ஆடவர் விருதுகான பரிந்துரை பட்டியலில் டிராவிஸ் ஹெட், ஜோஸ் ஹசில்வுட், பாட் கம்மின்ஸ் ஆகியோர் இடம்பிடித்திருந்தனார்.
இதில் வாக்கெடுப்பின் அடிப்படையில் டிராவிஸ் ஹெட்டிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டும் மூன்று வடிவங்களிலும் சேர்த்து டிராவிஸ் ஹெட் 43.24 என்ற சராசரியுடன் 1427 ரன்களைச் சேர்த்தார். மேற்கொண்டு இவர் 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் வீரர் விருதையும் வென்று டிராவிஸ் ஹெட் வென்றுள்ளார். அதேசமயம் ஆண்டின் சிறந்த பந்துவீச்சாளருக்கான ஷேன் வார்னே விருதை ஜோஷ் ஹசில்வுட்வுட்டும், டி20 வீரருக்கான விருதை ஆடம் ஸாம்பாவும் வென்றுள்ளார்.
மகளிர் ஒருநாள் சிறந்த வீராங்கனை விருதை ஆஷ்லே கார்ட்னருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆஷ்லே கார்ட்னர் பேட்டிங்கில் 38.5 என்ற சராசரியில் 385 ரன்களையும், பந்துவீச்சில் 23 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். அதேசமயம் ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனை விருதை பெத் மூனில் வென்றுள்ளார். அவர் 2024ஆம் ஆண்டில் 47.53 என்ற சராசரியில் 618 ரன்களைக் குவித்ததன் காரணமாக இந்த விருதை வென்றார்.
Also Read: Funding To Save Test Cricket
இதுதவிர்த்து பிக் பேஷ் லீக் தொடருக்கான சிறந்த வீரர் விருதை கிளென் மேக்ஸ்வெல் மற்றும் கூப்பர் கோனொலி ஆகியோர் இணைந்து வென்றுள்ளனர். அதே நேரத்தில் மகளிர் பிக் பேஷ் லீக் தொடரின் சிறந்த வீராங்கனை விருதை எலிஸ் பெர்ரி மற்றும் ஜெஸ் ஜோனாசென் ஆகியோர் இணைந்து வென்றுள்ளனர். இதுதவிர்த்து ஆண்டின் சிறந்த இளம் கிரிக்கெட் வீரருக்கான டான் பிராட்மேன் விருதை சாம் கொன்ஸ்டாஸ் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.